கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில், 56 நாட்கள் நடைபெறும் முரஜபம் சடங்கின் நிறைவாக, லட்சதீபம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோவில் முழுவதும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பாரம்பரிய எண்ணெய் விளக்குகளில் லட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றி பத்மநாப சுவாமியை தரிசனம் செய்தனர். திருவனந்தபுரம் வரலாற்றிலும், பத்மநாபசுவாமி கோவில் ஆன்மிகத்திலும் லட்சதீபம் திருவிழா முக்கிய பங்கு வகிக்கிறது.இதையும் படியுங்கள் : லாரி - கார் பயங்கர மோதல்: அப்பளமாக நொறுங்கிய கார்