பெட்ரோல் பங்கை நோக்கி கழுத்தில் ரத்த காயங்களுடன் ஓடி வந்த சிறுவன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு. சகோதரி அளித்த தகவலின் மூலம் பக்கத்து பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரை பிடித்து விசாரித்த போலீஸ். அடுத்தடுத்த விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். 17 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?கழுத்தில் ரத்தக் காயங்களுடன் ஓடி வந்த சிறுவன்மங்கள்பூர் ரோட்ல அதிகப்படியான வாகனங்கள் போறதும், வர்றதுமா இருந்துருக்கு. அப்ப அங்குள்ள பெட்ரோல் பங்க்க நோக்கி 17 வயசு சிறுவன் ஒருவன் கழுத்துல ரத்த காயங்களோட ஓடி வந்துருக்கான். இதபாத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அந்த சிறுவன ஆம்புலன்ஸ்ல ஏத்தி ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சுருக்காங்க. ஆனா அங்க சிகிச்சை அளிச்ச டாக்டர் சிறுவன் உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், உயிரிழந்த சிறுவன் யாருன்னு கண்டுபிடிக்க விசாரணையில இறங்குனாங்க. அதுல அந்த சிறுவன் மங்கள்பூர் பகுதிய சேந்த சௌரப் பால்ன்னு தெரியவந்துச்சு. சிறுவன் உயிரிழந்த தகவல கேட்டு பதறியடிச்சுட்டு ஓடி வந்த அவரோட சகோதரர் மற்றும் சகோதரி, சடலத்த கட்டிப் பிடிச்சு அழுதுருக்காங்க. அப்ப அங்கருந்த போலீஸ், உங்க தம்பிய கொலை செஞ்சது யாரு? உங்க குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்னை இருக்கா? முன்விரோதத்தால உங்க தம்பிய யாரும் கொலை செஞ்சுட்டாங்களான்னு கேட்ருக்காங்க.ஆசிரியர் அனூப் சிங்கை வலைவீசி தேடிய காவலர்கள்அதுக்கு சிறுவனோட சகோதரி, என் தம்பிக்கு பள்ளி ஆசிரியர் அனூப் சிங் தான் லாஸ்ட்டா ஃபோன் பண்ணி கூப்டாரு, அவன் வீட்டுக்கு சீக்கிரமா வந்துருவேன்னு சொல்லிட்டு தான் கிளம்புனான், ஆனா அவன நாங்க இந்த கோலத்துல பாப்போம்ன்னு நினைச்சு கூட பாக்கலன்னு சொல்லி அழுதுருக்காங்க. இந்த தகவல வச்சு, நேரா அனூப் சிங்கோட வீட்டுக்கு போன போலீஸ், அவர கஸ்டடியில் எடுத்து விசாரிச்சுருக்காங்க. அதுல தான் பல திடுக்கிடும் தகவல் வெளியாகிருக்கு.சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த 17 வயது சிறுவன்மங்கள்பூர் பகுதிய சேந்த 17 வயசு சிறுவனான சௌரப்பாலோட குடும்பம் ரொம்ப வறுமையில இருந்துருக்கு. சமீபத்துல இவரோட தந்தை உடல் நலக்குறைவால உயிரிழந்துட்டாரு. இதனால சௌரப், தன்னோட சகோதரியோட அரவணைப்புல வாழ்ந்துட்டு இருந்துருக்கான். சௌரப் அதே பகுதியில உள்ள ஒரு பள்ளியில 11ம் வகுப்பு படிச்சுட்டு இருந்ததாக கூறப்படுது.அடிக்கடி பணம் தரவேண்டும் என மிரட்டிய மாணவன்இந்த சிறுவனுக்கு, பக்கத்து ஸ்கூல்ல வேலை பாத்த ஆசிரியர் அனூப் சிங்கோட பழக்கமாகிருக்காரு. அனூப் சிங்கிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதா கூறப்படுது. இதுக்கிடையில அனூப் சிங் வேறொரு பெண் கூட பழகிட்டு இருந்துருக்காரு. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி அனூப் சிங் தன்னோட கள்ளக்காதலி கூட ஊர் சுத்திட்டு இருந்துருக்காரு. இதபாத்த 17 வயசு சிறுவன், ரெண்டு பேரையும் அவங்களுக்கே தெரியாம புகைப்படம் எடுத்திருக்கான். அடுத்து அந்த புகைப்படத்த ஆசிரியர் கிட்ட காட்டுன சிறுவன், நீங்க என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டிங்க, நான் கேட்கும் போதெல்லாம் நீங்க எனக்கு பணம் கொடுக்கனும், அப்படி இல்லன்னா இந்த ஃபோட்டோ நான் உங்க உறவினர்களுக்கு அனுப்பி வச்சுருவேன்னு மிரட்டிருக்கான்.தகாத உறவை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டல்புகைப்படத்த பாத்து அதிர்ச்சியடைஞ்ச ஆசிரியர், இந்த ஃபோட்டோவ உடனே டெலிட் பண்ணு, இத வேற எங்கையும் அனுப்பி விட்டன்னா என் மானமே போய்ரும், நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்னு கெஞ்சியிருக்காரு. அன்னையில இருந்து சிறுவன் அந்த ஆசிரியர் கிட்ட இருந்து டெய்லி பணம் வாங்க ஆரம்பிச்சுருக்கான். சிறுவனுக்கு டெய்லி பணம் கொடுத்துட்டு இருந்த ஆசிரியர், ஒருகட்டத்துல பணம் கொடுக்குறத நிப்பாட்டிருக்காரு. அப்ப அனூப்பிற்கு ஃபோன் பண்ண சிறுவன், எனக்கு 500 ரூபாய் வேணும்ன்னு கேட்ருக்கான். அதுக்கு ஆசிரியர், இப்பல்லாம் என் செலவுக்கே பணம் பத்தல அதனால இனிமே உனக்கு நான் பணம் தரமாட்டேன், நீ அந்த புகைப்படத்தையும் டெலிட் பண்ணிருன்னு சொல்லிருக்காரு. அதுக்கு சிறுவன், நீங்க பணம் கொடுக்கலன்னா, உங்க தகாத உறவு விஷயத்த உங்க வீட்ல சொல்லிருவேன்னு மிரட்டிருக்கான்.ஆசிரியர் அனூப் சிங்கை கைது செய்து விசாரித்த போலீஸ்இதனால கடும் கோபமான ஆசிரியர், இவன இப்படியே விட்டு வச்சா, நம்மள தொந்தரவு பண்ணிட்டே தான் இருப்பான்னு நினைச்சு, சிறுவன கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு சிறுவனுக்கு ஃபோன் பண்ண ஆசிரியர் 500 ரூபாய் பணத்த வந்து வாங்கிக் கொண்டு போகும்படி கூப்டுருக்காரு. அத நம்பி சிறுவனும் ஆசிரியர் கூப்ட இடத்துக்கு போய்ருக்கான். அங்க போன உடனையே மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்த ஆசிரியர், சிறுவன கொடூரமாக தாக்கி கழுத்த அறுத்துருக்காரு. அதன் பின்னர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனளிக்காம உயிரிழந்துட்டான். விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், அனூப் சிங்க அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link பைக் ஷோரூம், குப்பைக்கிடங்கு, கூவம் ஆறு