தான் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என ஆதரவு அளித்தவர்களுக்கு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். கூட்டணிக்குள் குழப்பம் தலைதூக்கியுள்ள நிலையில், தான் தலைமை ஏற்கத் தயார் என்பதை மம்தா பானர்ஜி சூசகமாக தெரிவித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.