டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்து பேசினார். அப்போது ஜல் ஜீவன் திட்டத்தில் நிலுவையில் உள்ள தொகை மற்றும் இந்த ஆண்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை என மொத்தமாக ஆயிரத்து 706 கோடியை விடுவிக்கக் வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.