மோடி இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 22 ஆம் தேதி சவுதி அரேபியா செல்லயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் ஏற்று இந்த பயணத்தை மோடி மேற்கொள்கிறார். இரண்டு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. மூன்றாவது முறையாக மோடி சவுதி அரேபியா செல்வது குறிப்பிடத்தக்கது.