கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள வீரன்புரம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் புலிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ஐந்து புலிகள் நடமாடிய காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ள நிலையில், புலிகளுக்கு அஞ்சி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.