ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் உடன் மோதிய உன்னதி ஹூடா 21க்கு 12, 21க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.