பீகாரில் ராகுல் பேரணி நடத்திய இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக ஓட்டுகளை திருடுவதாகக் கூறி காங்கிரஸ் எம்பி ராகுல் பீகாரில் யாத்திரை ஒன்றை நடத்தினார். ஆனால், இந்த யாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.