news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மம்தா பானர்ஜி நிறுவிய சர்ச்சைக்குரிய கால்பந்து சிற்பம் அகற்றம்
tv

Also Watch

tv

Read this

மம்தா பானர்ஜி நிறுவிய சர்ச்சைக்குரிய கால்பந்து சிற்பம் அகற்றம்

கொல்கத்தா - மேற்குவங்கம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamtha bannerji

2017 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது நிறுவப்பட்டது :

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி நிறுவிய சர்ச்சைக்குரிய கால்பந்து சிற்பத்தை பாஜக அரசு அகற்றியது. 2017 உலகக் கோப்பை போட்டியின்போது, கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தின் முன்பு இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டது.

இந்த சிற்பத்தில் வீரரின் உடலுக்கு பதிலாக வெறும் பந்து மட்டும் இருக்கும். எனவே, இது அருவருக்கத்தக்கதாக வகையில் உள்ளதாக பலரும் விமர்சனம் செய்தனர்.

க்ரூஸர் ஜீப் மீது நேருக்கு நேராக மோதிய லாரி :

கர்நாடகாவில் ஜீப் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கலபுரகி மாவட்டம் லாட்லாப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது க்ரூஸர் ஜீப் நேருக்கு நேராக மோதியதில் ஜீப் அப்பளம் போல நொறுங்கியது. இதில், இங்கலகி கிராமத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

யானையை கண்டதும் தப்பியோடிய இளைஞர் :

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானையை கண்டதும் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு இளைஞர் ஒருவர் தப்பிச் சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பணியை முடித்துவிட்டு சீதார் குண்டு வனச்சாலை வழியே வீட்டிற்குச் சென்றபோது, அவ்வழியே திடீரென காட்டு யானை ஒன்று வழிமறித்தது.

ஜிம்கானா கிளப் நிலத்தை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை :

டெல்லியில் உள்ள ஜிம்கானா கிளப் நிலத்தை திரும்ப பெறும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில், ஜூன் 5-ம் தேதிக்குள் நிலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கிளப்பில் நிதி முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததால், இதன் நிர்வாகத்தை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்தியா மிகப்பெரிய அயுத ஏற்றுமதியாளராக மாறும் :

இன்னும் 25 முதல் 30 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக மாறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து பேசிய அவர், கடந்த காலங்களில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்ததாகவும், தற்போது உள்நாட்டிலேயே ஆயுதம் தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புத்தாக்கமும் இணையும்போது நாடு புதிய உயரங்களை எட்டும் என்றார்.

Related Link
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

0
2 hrs 22 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved