ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்காமல் 6வது இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் தேவங் காந்தி தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் 5 வது இடத்தில் களமிறங்கி நன்கு விளையாடி வருவதால், ரோகித் 6வது இடத்தில் களமிறங்கினால் இடது-வலது கை இணை நன்றாக அமையும் என்றார்.