உத்தரபிரதேசத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 68 ஆயிரம் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி சொத்துகளை சேர்க்கும் ஊழியர்களை கண்டறியும் வகையில்,ஜனவரி 31ம் தேதிக்குள் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் சொத்து விபரங்களை இணையதளப் பக்கத்தில் சமர்பிக்க வேண்டும்என்று அரசு உத்தர விட்டிருந்தது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத நிலையில் அவர்களின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. சொத்து விபரங்களை பதிவேற்றும் வரை சம்பளம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை ஊழியர்கள் தான் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. Related Link சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு