கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி பேருந்து நிறுத்தம் இடிந்து விழுந்ததில், அங்கு பேருந்துக்காக காத்திருந்த மூவர் காயமடைந்தனர். வடக்கன் பெரம்பூர் பகுதியில் மாணவர்களை அழைத்துச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை அதன் ஓட்டுநர் ரிவர்ஸ் எடுத்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் அமைந்திருந்த பேருந்து நிறுத்தக் கட்டிடம் மீது மோதியது.