மேற்கு வங்க மாநிலத்தில் திட்டமிடப்படாத SIR பணிகளால் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. SIR பணிக்கு எதிராக டெல்லி சென்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முறையிட்டபோது தலைமை தேர்தல் ஆணையம் முறையாக பதில் அளிக்கவில்லை என திரிணாமுல் எம்.பி அபிஷேக் பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். SIR-க்கு எதிராக பிற மாநிலங்கள் நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்ததாகவும், ஆனால் இவ்விவகாரத்தில் மத்திய அரசை வீழ்த்துவதில் மேற்கு வங்கம் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Related Link ஈரான் கலவரம் - தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவர்கள்