முதலமைச்சர் பதவி விவகாரம் கர்நாடக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிபதியாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி வாக்குப்படி நடந்து கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு முதலமைச்சர் பதவியை மேலிட தலைவர்கள் வழங்க வலியுறுத்தி டி.கே. சிவக்குமாரின் இந்த கருத்தை பதிவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த கருத்து அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டதாகவும், காங்கிரஸ் தலைமையை இலக்காகக் கொண்டதல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.