பலூச் போராளிக் குழு இரண்டு தற்கொலை தாக்குதல்தாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பெண்கள். பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பதிலடியாக 140-க்கும் மேற்பட்ட போராளிகளை பாகிஸ்தான் படை வீரர்கள் வீழ்த்தியதாகவும் பலுசிஸ்தான் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் தங்கள் அமைப்பைச் சேர்ந்த இரண்டு தற்கொலைத் தாக்குதல்தாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. Related Link உ.பி.இல் 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு