இமாச்சலப் பிரதேச கிராமம் ஒன்றில் திருமண விழாவில் பாரம்பரிய நடனம் ஆடிக் கொண்டிருந்தவர்களை ரசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பா மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில் மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருக்க அதனை ஏராளமானோர் கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியினர் நின்றிருந்த கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.