சுதந்திர போராட்ட வீரர்கள் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, இருவருக்கும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த நாளில் பாரத தாயின் இரு சிறந்த மகன்களான திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு நாம் தலைவணங்குவோம் என தெரிவித்துள்ளார். மேலும், தலைசிறந்த மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த இருவரும் தங்கள் உயிரை இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணித்து தேசப்பற்று உணர்வை எழுப்பியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.