60 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பழங்குடியினர் நலனுக்காக எதுவும் செய்யாமல் புறக்கணித்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாளையொட்டி குஜராத்தின் நர்மதாவில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர், நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் பெரும் பங்களிப்பை வழங்கியதாக பாராட்டு தெரிவித்தார். பீகார் தேர்தலில் தலித் வாக்காளர்கள் அதிகமுள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி பெற்றதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, சாதி அரசியலை முன் வைத்த இந்தியா கூட்டணியை பீகார் மக்கள் புறந்தள்ளியதாக விமர்சனம் செய்தார்.