உமர் காலித்தின் வாழும் உரிமை பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள "வாழும் உரிமை" என்பது விரைவான விசாரணையை பெறுவதையும் உள்ளடக்கியது என்றார். மேலும், நீண்டகால விசாரணை இன்றி ஒருவரை சிறையில் வைப்பது தண்டனைக்கு சமமானது எனவும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஜாமீனை தானாகவே மறுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : காசா அமைதிக்குழு: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு