நாட்டில் புதிதாக 4 வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்க உள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரை வந்தே பாரத் ரயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இதேபோல், உத்தரப்பிரதேசத்தின் பனாரஸ் நகரில் இருந்து மத்திய பிரதேசத்தின் கஜூராகோவுக்கும், லக்னோவில் இருந்து சஹரன்பூருக்கும், பஞ்சாபின் பிரோஸ்பூரில் இருந்து டெல்லிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளன.