பீகார் சட்டமன்ற தேர்தலில் நாளை முதற்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக நடைபெறும் 121 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளியாக சுற்று சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.