பொதுவாகவே, பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடை தனி சிறப்பு தான். அதிலும் குறிப்பாக சுதந்திர தினம், குடியரசு தினம் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் அணியும் ஆடை அனைவரையும் கவரத் தான் செய்கிறது. அதன் பின், அதோட பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவலும் வெளியாகும். அந்த மாதிரி தான் அவரது இந்த வாட்ச்...நம்நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவு கூரும் வகையில் இந்த வாட்ச் தயார் செய்யப்பட்டுள்ளது. 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின், வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டு இந்த வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ரூபாய் நாணயம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாணயம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாணயத்தின் நடுவே இந்தியாவின் சுதந்திர பயணத்தை குறிக்கும் மற்றும் நாட்டின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலான புலியின் உருவம் இடம் பெற்றுள்ளது. இது, 43 மி.மீ. அளவுள்ள துருப்பிடிக்காத எக்கினால், உருவாக்கப்பட்டது. இதோட விலை சுமார் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை. இந்த வாட்ச்-ஐ ரோமன் பாக் பிராண்ட் தயாரித்து உள்ளது. இது ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம். இப்போது இந்த வாட்ச் தான், சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.