பீகாரில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அரசியலமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக தங்கள் போராட்டம் தொடரும் என குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, தோல்விக்கான காரணங்களைப் புரிந்துகொண்ட பிறகு விரிவான விளக்கம் வெளியிடப்படும் என கார்கே தெரிவித்தார்.