மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பு விழாவின்போது, துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே, தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது. பதவிப்பிரமாண உரையை ஆளுநர் வாசிக்க தொடங்கியதை கவனிக்காமல், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மறைந்த தலைவர் பாலாசாகேப் தாக்கரே ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு ஏக்நாத் ஷிண்டே நன்றி கூறினார்.