பீகார் தேர்தல் முடிவில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியை விட பா.ஜ.க அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளதால் முதல்வர் பதவியில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'நிதிஷ்குமார் தான் அடுத்த முதல்வர்' என அடித்துக்கூறுகின்றனர். ஆனால் மத்திய அரசுக்கு, நிதிஷ் குமார் கட்சி எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்பதால், பீகார் முதல்வர் பதவியில் மாற்றம் வர வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எனவே, நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பீகார் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.