மகராஷ்டிராவில் புதிய முதலமைச்சர் யார்? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கிட்டத்திட்ட ஒரு வாரமாக முதலமைச்சரின் பெயரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், புதிய முதலமைச்சரை பாஜக தலைமை முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது