ராமேஸ்வரத்தில், காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி குத்திக்கொலை. அரசுப் பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து கொன்ற கொடூர இளைஞர்.ராமேஸ்வரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு செல்லும்போது காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்த வாலிபர், தன்னோடு பேச மறுத்ததால், மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்குச் சென்ற +2 மாணவியின் கழுத்திலேயே சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்று வெறிச்செயல்.ஒருதலையாக காதலித்த கொலைகார இளைஞர் முனிராஜை கைது செய்தனர் ராமேஸ்வரம் போலீசார்.சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினிக்கு, அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் முனிராஜ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தகவல்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மாணவி நடந்து சென்ற போது அருகில் நடந்து வருவது போன்ற படங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.