சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஜனவரி 26ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 15,000 ரூபாயை கடந்து விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.இன்றைய விலை நிலவரம்சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை, ஒரு கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1.20,200க்கு விற்பனை ஆனது.புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலைவெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.375க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ரூ.3,75,000க்கும் விற்பனை ஆனது. வாடிக்கையாளர்கள் கலக்கம்அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 91.63 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துடன், சர்வதேச அரசியல் சூழல்களின் எதிரொலியாக, பாதுகாப்பு கருதி, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் புதிய உச்சத்துக்கு காரணம். இதனால், ஏழை, எளிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ஏறு முகத்தில் தங்கம்உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Related Link தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி