அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் திமுக அரசு விதிகளை தளர்த்தி, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்குவதாக அதிமுக காட்டமாக விமர்சித்துள்ளது. அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான் என்றும், அதுவும் அதிமுக அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி 28 மாதம் கழித்து உரிமைத்தொகை கொடுத்ததாகவும் சாடியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின், இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் போது, 30 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்து விட்டு தற்போது 17 லட்சம் பேருக்கு மட்டுமே தருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. அதிலும், வெறும் 4 மாதங்கள் மட்டும் தான் வழங்க முடியும் என்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை? எங்கே என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.