புஷ்பா திரைப்படம் வெளியான ஆறே நாட்களில் ஆயிரத்து 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக ஆயிரம் கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. இதற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை கடந்ததே சாதனையாக இருந்தது. இதுவரை இந்திய சினிமாவில் டங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப்-2, கல்கி, ஜவான், பதான் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.