ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் மேம்பாலத்தின் மீது மோதி பேருந்து உருக்குலைந்ததில் ஓட்டுநர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேம்பாலத்தின் கீழ் உள்ள வளைவில் பேருந்தை வேகமாக திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பக்கவாட்டுச் சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.