சிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் குகேஷ்- சீனாவின் டிங் லிரென் இடையிலான 13வது சுற்று ஆட்டம் 'டிரா'-வில் முடிந்தது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 13 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், இருவரும் தலா 6 புள்ளி 5 பாய்ண்ட்களுடன் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் இன்று 14வது சுற்று மற்றும் கடைசி ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் நபரே சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுவார். இந்த சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தால் வரும் 13ம் தேதி டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதுள்ளது.