மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக் காளியை, பெரம்பலூர் அருகே போலீஸ் முன்னிலையில், மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், யார் இந்த வெள்ளைக் காளி? மதுரையில் 20 பேரைக் காவு வாங்கிய ரத்த சரித்திரம் என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். 2003 TO 2025 - நடந்தது என்ன? கடந்த சனிக்கிழமை நைட்டு, மதுரைய சேர்ந்த ரவுடி காளீஸ்வரன் என்ற கிளாமர் காளிய ஒரு கும்பல் தலைய சிதச்சு மிகக்கொடூரமா வெட்டிக் கொலை பண்ணிருக்காங்க. ரெண்டு தரப்புக்கு இடையே பல வருஷமா நடந்துட்டு வர மோதல்ல, பழிக்குப்பழியா இந்த சம்பவம் நடந்திருக்குறதா கூறப்படுது. வேறொரு கேஸ்ல ஜெயில்ல இருக்குற வெள்ளைக்காளி தான், ஜெயில்ல நாலு கம்பிகளுக்கு நடுவுல உக்காந்துக்கிட்டே, கிளாமர் காளிய கொல்ல ஸ்கெட்ச் போட்டதா சொல்லப்படுது. 22 வருஷ பகையா?. அதுல 22 பேர் கொலையா?. அப்படி என்னதான் பகை, எதுக்கு இத்தன கொலைன்னு புருவத்த உயர்த்திக்கிட்டே கேக்குறவங்களுக்கான பதில்தான் இப்ப சொல்லப்போற விஷயம்..வைகையாறு ஓடுற மதுரையில, சுவர் போஸ்டர் ஒட்டுறதுல ஏற்பட்ட சின்ன வாக்குவாதம்தான், 22 வருஷமா ரத்த ஆறு ஓடிட்டு இருக்குறதுக்கு ஆரம்பப்புள்ளியே. உறவினர்களான வீ.கே.குருசாமி - ராஜபாண்டிராமாநாதபுரம் மாவட்டம், கமுதி பக்கத்துல உள்ள கருத்தறிவான்-ங்குற கிராமத்த சேந்தவங்கதான் இந்த வீ.கே.குருசாமியும், ராஜபாண்டியும். ரெண்டு பேருமே உறவுக்காரங்க தான். இவங்க ரெண்டு பேரோட குடும்பமும் பல வருடங்களுக்கு முன்னாடியே மதுரை, கீரைத்துறைக்கு வந்து குடியேறிருக்காங்க. ஒருகட்டத்துக்கு மேல, ரெண்டு பேரும் அரசியலுக்கு போக முடிவு பண்ணி, வீ.கே.குருசாமி திமுகவிலயும், ராஜபாண்டி அதிமுகவிலயும் இணைஞ்சிருக்காங்க.2003ல் போஸ்டரால் ஏற்பட்ட களேபரம்அப்ப, 2003-ல உள்ளாட்சித் தேர்தல் வந்துச்சு. தேர்தல் பணில ரெண்டு கட்சிய சேர்ந்தவங்களும் ராப்பகலா வேலை பாத்துட்டு இருந்தாங்க. ஒருநாள், சுவர்ல போஸ்டர் ஒட்டுறது சம்பந்தமா, வீ.கே.குருசாமி தரப்புக்கும், ராஜபாண்டி தரப்புக்கும் இடையில பிரச்சினை ஏற்பட்டிருக்கு. அந்த பிரச்சினை கைகலப்பா மாறி, அந்த கைகலப்பு வெட்டுக்குத்துல போய் முடிஞ்சிருக்கு. வீ.கே.குருசாமி உட்பட 12 பேரை கைது செய்த போலீசார்ரெண்டு தரப்பும் இடையில ஏற்பட்ட மோதல்ல, ராஜபாண்டியோட ரைட் ஹேண்ட் மாதிரி செயல்பட்டுட்டு இருந்த அவரோட அண்ணன் மகன் சின்ன முனீஸ, வீ.கே.குருசாமி தரப்ப சேந்தவங்க கடுமையா தாக்கியிருக்காங்க. இதுல நிலைகுலஞ்சு போன சின்ன முனீஸ், என்ன இப்பவே கொன்னு போட்ருங்க, நான் பொழச்சேன்னா உங்க யாரையும் உயிரோட விட மாட்டேன்னு, உயிருக்கு போராடிட்டு இருக்குற நிலைமையிலயும் மிரட்டுற தொனில பேசுனதா சொல்லப்படுது. இதனால ஆத்திரமடஞ்ச எதிர் தரப்பு கும்பல், சின்ன முனீஸ சரமாரியா வெட்டிக் கொன்னுட்டாங்க. இந்த கேஸ் சம்பந்தமா, வீ.கே.குருசாமி, பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமூர்த்தி, வழுக்கை முனீஸ், கணுக்கன் முனியசாமின்னு 12 பேர போலீஸ் அரெஸ்ட் பண்ணிருந்தாங்க. இதுதான், 22 ஆண்டு கால பகைக்கு அஸ்திவாரம்.திமுக மண்டலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீ.கே.குருசாமிஇந்த சம்பவம் நடந்து மூணு வருஷத்துக்கு அப்புறம், அதாவது 2006-ல, வீ.கே.குருசாமி மதுரை மாநகராட்சி திமுக கிழக்கு மண்டலத் தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காரு. ரெண்டு தரப்புக்கும் இடையில புகைச்சல் இருந்துட்டே வந்த நிலையில, 2008-ல சின்ன முனீஸ் கொலையில சம்பந்தப்பட்ட வழுக்கை முனீஸை, ராஜபாண்டியோட உறவினர் சப்பாணி முருகன் வெட்டிக் கொன்றுக்கான். என்ட்ரி கொடுத்த வெள்ளைக்காளிஇதுக்கு நடுவுல, வெள்ளைக்காளிங்குறவரும் சீனுக்குள்ள வர்ராரு. வீகே குருசாமி - ராஜபாண்டியன் தரப்புக்கு இடையிலான பிரச்சினையில. முதன் முதலா கொல்லப்பட்ட சின்ன முனீஸோட கூடப்பிறந்த தம்பிதான் இந்த வெள்ளைக்காளி. இவன் ராஜபாண்டி டீமோட இணைஞ்சு கத்திய தூக்குனதுக்கு அப்புறம்தான், ரெண்டு தரப்புக்கும் இடையிலான மோதல் போக்கும், கொலைகளோட எண்ணிக்கையும் அதிகரிச்சிருக்கு. வெள்ளைக்காளி, சகுனி கார்த்தி கைதுதன்னோட அண்ணன் சின்ன முனீஸ கொன்னவங்கள பழிதீர்க்காம விடமாட்டேன்னு சபதம் போட்ட வெள்ளைக்காளி, வீ.கே.குருசாமியோட உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்திங்குற ரெண்டு பேர, 2008-ல வில்லாபுரத்துல வச்சி வெட்டிக் கொலை செஞ்சிருக்கான். இந்த கேஸ்ல, வெள்ளைக்காளி, அவரோட உறவினர் சகுனி கார்த்திக் உள்ளிட்ட சிலர போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடச்சாங்க. ஜெயிலுக்குள்ள, பிரபல ரவுடி முத்து இருளாண்டிங்குறவரோட வெள்ளைக்காளிக்கு பழக்கம் ஏற்பட்டு, அவரும் இந்த கும்பலோட கைகோர்த்திருக்காரு.வீ.கே.குருசாமியின் தங்கை கணவரின் தம்பி காட்டுராஜா அதுக்கப்புறம், 2013-ல சின்ன முனீஸ் கொலை வழக்குல சம்பந்தப்பட்ட வி.கே.குருசாமியோட தங்கச்சி கணவர் பாம்பு பாண்டிய வெங்காய மார்க்கெட்ல வச்சு, வெள்ளைக்காளி, சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி ஆகிய மூணு பேரும் சேர்ந்து வெட்டிக் கொன்றுக்காங்க. இந்தக் கொலைகளுக்கெல்லாம் பழிக்குப்பழியா, சகுனி கார்த்தியோட தாய்மாமன் மயில் முருகன 2013-ல வீ.கே.குருசாமியோட தரப்பு வெட்டிக் கொலை செஞ்சிருக்கு. இந்த கேஸ் சம்பந்தமா, வீ.கே.குருசாமியோட மகன் மணி உட்பட சிலர் கைதானங்க. இதோட தொடர்ச்சியா, 2015-ல, வெள்ளைக்காளியும், ராஜபாண்டியோட மகன் தொப்பிலி முனியசாமியும் சேந்து குருசாமியோட மகன் மணியோட க்ளோஸ் பிரண்ட் குப்பு என்ற முனியசாமிய கொன்னுட்டாங்க. அடுத்து, 2016-ல குருசாமியோட மகள் விஜயலட்சுமியோட கணவர் எம்.எஸ்.பாண்டியனோட தம்பி காட்டுராஜாவ தான் வெள்ளைக்காளி டீம் டார்கெட் பண்ணாங்க. எம்.எஸ்.பாண்டியன் பஸ்ல போய்ட்டு இருந்தப்ப, வெள்ளைக்காளி தரப்பு, அவர பஸ்ல வச்சே வெட்டிச்சாய்ச்சிட்டு, அதுக்கப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் சரணடைஞ்சிருக்காங்க.தொப்பிலி முனுசாமியின் சாம்பல் கூட மிஞ்சவில்லைஇதுக்குப் பழிக்குப்பழியா கொலை பண்ணியே தீருவேன்னு களத்துல குதிச்ச வி.கே.குருசாமியோட மகன் மணி, 2017-ல, ராஜபாண்டியோட மகன் தொப்பிலி முனுசாமிய கமுதிக்கு கடத்திட்டு போய், அங்க பைக்கோட சேத்து கட்டி வச்சு, பெட்ரோல ஊத்தி தீ வச்சு கொளுத்தி மிகக் கொடூரமா கொலை பண்ணியிருக்காங்க. இதுல, தொப்பிலி முனுசாமியோட சாம்பல் கூட கிடைக்கல. அதுக்கப்புறம், அதே வருஷத்துல, வெள்ளைக்காளியோட கூட்டாளிங்களான சகுனி கார்த்திக்கும், முத்து இருளாண்டியும் சேந்து, வீ.கே.குருசாமிக்கு நெருக்கமான சடையாண்டிய, மதுரை கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல வச்சே வெட்டிக் கொன்றுக்காங்க. போலீஸின் அதிரடி என்கவுன்ட்டர்இதுக்கு இடையில, வெள்ளைக்காளி குரூப்ப சேர்ந்த சகுனி கார்த்தியும், முத்து இருளாண்டியும் அப்பாவி மக்கள மிரட்டுறது, அடிக்குறதுக்குது அடாவடி பண்ணிட்டு இருந்துருக்காங்க. அதுமட்டுமில்ல, போலீஸ் ஆஃபிசர் ஒருத்தருக்கு போன்ல கொலை மிரட்டல் விடுத்திருக்காங்க. அந்த வழக்கு சம்பந்தமா, போலீஸ் அவங்க ரெண்டு பேரையும் பிடிக்கப்போனப்ப, அவங்க போலீஸ தாக்கிட்டு தப்பிச்சு ஓடுனதா சொல்லப்படுது. அப்ப, சகுனி கார்த்தியையும், முத்து இருளாண்டியையும் போலீஸ் துப்பாக்கியால சுட்டு. என்கவுன்ட்டர் பண்ணிட்டாங்க. இந்த என்கவுன்ட்டருக்கு வீ.கே.குருசாமிதான் காரணம்னு நினச்ச எதிர் தரப்பு, அவங்க மேல இன்னும் கொலைவெறியாகியிருக்காங்க.வீ.கே.குருசாமியின் மருமகனுக்கு வைத்த குறி தப்பியதுஅடுத்து, 2018-ல கீழ்மதுரையில உள்ள ரேஷன் கடையில வச்சு, வீ.கே.குருசாமியோட மருமகன் எம்.எஸ்.பாண்டின்னு நினைச்சு, அவரோட சொந்தக்காரரான முனியசாமிய வெள்ளைக்காளியும், கூட்டாளிங்களும் சேந்து வெட்டிக் கொன்னுட்டாங்க. இந்த முறை எம்.எஸ்.பாண்டி, மிஸ் ஆகிட்டான் அடுத்த முறை சிக்காமலா போய்ருவான்னு வெள்ளைக்காளி கும்பல் வெயிட் பண்ணிட்டே இருந்தாங்க. அந்த நேரத்துலதான், 2019-ல, தேர்தல் வேலையில ஈடுபட்டிருந்தப்ப, எம்.எஸ்.பாண்டிய, வெள்ளைக்காளியோட கூட்டாளிங்க, ஓட ஓட வெட்டி படுகொலை செஞ்ச சம்பவம், அப்ப மதுரையில பெரிய பரபரப்ப ஏற்படுத்துச்சு. அதுக்கடுத்து, வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த குல்லா என்ற முத்துப்பாண்டியை, 2020-ல குருசாமி தரப்ப சேர்ந்தவங்க வெட்டிக் கொன்னாங்க. இதுல, மாடு மணி உட்பட சிலர போலீஸ் அரெஸ்ட் பண்ணிருந்தாங்க. முனியசாமியை மிரட்டிய வீ.கே.குருசாமி ஆதரவாளர்அதே 2020-ல, குருசாமியோட மருமகன் எம்.எஸ்.பாண்டி கொலை வழக்குல தொடர்புடைய முனியசாமிய, குருசாமி தரப்ப சேர்ந்த வகுத்தாலை என்ற மணி மிரட்டியிருக்கான். இந்த கோவத்துல, வகுத்தாலை என்ற மணியோட பிரண்ட் முருகானந்தத்த, நடுரோட்டுல வச்சு தலையிலேயே வெட்டி கொடூரமா கொன்றுக்காங்க வெள்ளைக்காளி கும்பல்.2023-இல் வீ.கே.குருசாமி மீது தாக்குதல்இதுக்கு இடையில, 2023-ல, பெங்களூருல உள்ள ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இருந்த வீ.கே.குருசாமிய, ஒரு கும்பல் அரிவாள், கத்தியால சரமாரியா வெட்டி கொல்ல பாத்தாங்க. இதுல அதிர்ஷ்டவசமா உயிர் தப்பிச்சாலும், தாக்குதல்ல அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுச்சு. ஹாஸ்பிட்டல்ல தீவிர சிகிச்சை பிரிவுல அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுச்சு. இப்ப வரைக்கும் வீட்டுல வச்சே சிகிச்சை பெற்றுட்டு இருக்காரு. அதே மாதிரி, ராஜபாண்டி, ஒரு வருஷத்துக்கு முன்னாடி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போய்ட்டாரு. 22 ஆண்டு கால பகையின் தொடர்ச்சிஇப்படி 22 வருஷமா நடந்துட்டு இருக்குற கொலையோட தொடர்ச்சியாதான் சனிக்கிழமை நைட்டு, வீ.கே.குருசாமியோட தங்கச்சி மகன் காளீஸ்வரன் என்ற கிளாமர் காளிய, வெள்ளைக்காளி கேங் கொலை பண்ணிருக்காங்க. வீ.கே.குருசாமி தரப்பு, வெள்ளைக்காளி தரப்ப சேந்தவங்கள கொலை பண்ண பல கேஸ்ல, இந்த கிளாமர் காளி சம்பந்தப்பட்டிருக்குறதாவும், இவர் மேல ஏகப்பட்ட கேஸ் நிலுவையில இருக்குறதாவும் சொல்லப்படுது. அதோட, 2023-ல பெங்களூர்ல வச்சு வீ.கே.குருசாமிய தாக்கப்பட்டதுல இருந்தே, அவர தாக்குன வெள்ளைக்காளியையும், அவன் கேங்க சேர்ந்தவங்களையும் கொன்னு வீசனும்னு பிளான் போட்டுட்டு இருந்துருக்கான் இந்த கிளாமர் காளி.2 குடும்பங்களுக்கு இடையேயான பகைஇந்த விஷயம் வெள்ளைக்காளி காதுக்கு போய்ருக்கு. வெள்ளைக்காளி இப்ப, வேறொரு கேஸ்ல ஜெயில்ல இருக்கான். ஜெயில்ல இருந்துட்டே கிளாமர் காளியோட கதைய முடிக்க, வெள்ளைக்காளிதான் முழுக்க முழுக்க ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததா சொல்லப்படுது. 22 வருஷ பகையில, கிளாமர் காளியோட கொலை 22வது கொலை. ரெண்டு தரப்ப சேந்தவங்க, அவங்களோட பிரண்ட்ஸ், பிரண்ட்ஸோட பிரண்ட்ஸ்னு இதுவரை 22 பேரோட உயிர் பறிபோய்ருக்கு. இப்படியே ரெண்டு தரப்பினரும் மாறி மாறி வெறியாட்டம் ஆடுறது எப்போ நிக்கப் போகுதுங்குறதுதான் மிகப்பெரிய கேள்வியே.கூலிப்படைகளே இல்லாமல்...இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, இத்தனை கொலை சம்பவங்கள்ல, ஒரு சம்பவத்துல கூட எந்த கூலிப்படையுமே சம்பந்தப்படல. முழுக்க முழுக்க வீ.கே.குருசாமி மற்றும் ராஜபாண்டியோட சொந்தக்காரங்களும், நண்பர்களும் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்காங்க. ரெண்டு தரப்புக்கும் இடையிலான இந்த பகை, இன்னும் எத்தன பேர காவு கொடுக்கப்போகுதோ தெரியல, சீக்கிரம் காவல்துறையும், அரசாங்கமும் இதுக்கு ஒரு முடிவு கட்டனும்னு வலியுறுத்தியிருக்காங்க தூங்காநகர மக்கள்... Related Link வேறு மதத்தவரை காதலித்த இளம்பெண்