news-tamil-logo

3/16/2026, 8:51:01 PM

news-tamil-logo
more
Home news ரூ.2,120 குறைந்த தங்கம் விலை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

ரூ.2,120 குறைந்த தங்கம் விலை

கிலோவுக்கு ரூ.20,000 குறைந்த வெள்ளி

Posted on: Mar 04, 2026 05:02 AM

13901

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலையால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மார்ச்-01 தங்கம், வெள்ளி விலை
சென்னையில், மார்ச் 1ஆம் தேதி ஞாயிறன்றும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 26,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 225 விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 325 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 25,000 ரூபாயாக இருந்தது.

மார்ச்-02 தங்கம், வெள்ளி விலை
சென்னையில், ஒரு சவரன் 22 காரட் ஆபரண தங்கம், ரூ.920 குறைந்து, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.115 குறைந்து ரூ.15,660க்கு விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில், வாரத்தின் முதல் நாளான மார்ச் 2ஆம் தேதி, லேசான சரிவை கண்டது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்தது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-03 விலை நிலவரம்
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மார்ச் 03ஆம் தேதி, ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.15,650க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 315க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனை ஆனது. ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் 1,560 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-04 தங்கம் வெள்ளி விலை
ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 265 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்தது. ஒரு கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

* இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு
* ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு


மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக கடும் சரிவுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தைகள். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவை கண்டது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
01.03.2026 - ரூ.1,26,200
02.03.2026 - ரூ.1,25,280
03.03.2026 - ரூ.1,23,720
04.03.2026 - ரூ.1,21,600

Related Link
இன்றைய ராசி பலன்கள் 04032026

இன்றைய ராசி பலன்கள் 04032026

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
4 hrs 28 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved