உலகளவில் 29 கோடியே 53 லட்சம் போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் ஆயுத மோதல்கள், மனிதாபிமான உதவிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது, பருவநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் கூடுதலாக ஒரு கோடியே 37 லட்சம் போ் உணவு பற்றாக்குறையை எதிா்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா முனை, சூடான், ஹைட்டி, மாலி, தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் மட்டும் 95 சதவீதம் போ் மிக மோசமான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.