2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் அடித்தது. பின்னர் இறங்கிய இலங்கை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 58 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.