கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 325 பேருந்துகளும், நாளை 280 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்ல 81 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.