இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 25-ம் தேதி தனுஷ்கோடி அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக கவலை தெரிவித்தார்.