ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடித்து விபத்து.பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு, 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம். நவ்காம் காவல்நிலையத்தில் வெடித்த வெடிபொருட்கள், பரிதாபாத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்டவை எனத் தகவல்.வெடிவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை.காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது வெடிவிபத்து.தாசில்தார் உள்பட 2 வருவாய்த்துறை அதிகாரிகளும் உயிரிழந்ததாக தகவல்.ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில் 350 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதாக தகவல்.பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.ஜம்மு-காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தின் சத்தம் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டதாக தகவல்.மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு.