இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 தொடரில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.