இந்திய எல்லைக்குள் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு சீனர்கள் வசம் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அவர், பிரதமர் இதை மறுத்தாலும், சீனர்கள் இந்திய எல்லைக்குள் இருப்பதாக ராணுவ தளபதியே கூறுவதாக தெரிவித்தார்.