துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் ஓட்டிய 414 என்ற கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அஜித்குமார் அணியினர், விபத்து நடைபெறுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அஜித் காரை ஓட்டியதாகவும், ஓட்டுநர் Dominic Olbert ஓட்டும்போது விபத்துக்குள்ளானதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.