சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் உருவான 2K லவ் ஸ்டோரி திரைப்படத்தின் 4ஆவது பாடலான ”எதுவரை உலகமே” பாடல், இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜெகவீர் நாயகனாகவும், மீனாட்சி நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம், வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது.