கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில், அரசுப்பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.