வரும் 22ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா, கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.