பணி நிரந்தரம், கால முறை ஊதியம் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர்.10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் சத்துணவுத் துறையில் அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என, 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், பணிச்சுமையுடன் பணியாற்றி வரும் இவர்கள், 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நிலுவை காலத்திற்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்கொடை 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறைஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 300க்கும் மேற்பட்டவர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்ததால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் - சென்னை சாலையில் திடீர் மறியல்விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் திடீரென விழுப்புரம் - சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டு, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புதேனியில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாக கைதுராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினர், 200க்கும் மேற்பட்டோர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்ராமநாதபுரம், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், அச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் திடீரென சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம், கைது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். Related Link ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு?