மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 19 வயது இளைஞர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதி, சாலையோரம் வசிப்பவரின் 4வயது மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காரை ஓட்டி வந்த 19வயது இளைஞன் சந்தீப் கோலேவை கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.