கர்நாடக மாநிலம்... நண்பர்களுடன் சேர்ந்து, மனைவி கதையை முடிக்க மாஸ்டர் பிளான். மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்ததோடு, கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரம். 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவனையில் உயிருக்கு போராடும் பெண். மனைவி கதையை முடிக்க நண்பர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்த கொடூரன் சிக்கியது எப்படி? கொலை முயற்சி செய்யும் அளவிற்கு மனைவி மீது அப்படி என்ன ஆத்திரம்?அதிகாலை நேரம், ஒரு வீட்டுல இருந்து பயங்கர சத்தம் கேட்டுருக்கு. என்ன இவ்வளவு சத்தம்னு பதறிக்கிட்டு ஓடி வந்து பாத்தா, பக்கத்துல உள்ள ஒரு வீட்டுக்குள்ள இருந்து புகையா வந்துருக்குது. அத பாத்த அக்கம்பக்கத்துல இருந்தவங்க வீட்டுல உள்ளவங்களுக்கு என்னாச்சுங்குற பதற்றத்தோட போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. விஷயம் கேள்விப்பட்டு உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், புகை மூட்டமா இருந்த வீட்டுக்குள்ள போய் பாத்தப்ப, அந்த வீட்டுல இருந்த நாகரத்னா-ங்குற பெண் தீக்காயங்களோட போராடிட்டு இருந்துருக்காங்க. உடனே அவங்கள மீட்டு ஹாஸ்பிட்டல் சேத்துருக்காங்க.சமையலுக்கு வச்சிருந்த கேஸ் சிலிண்டர் வெடிச்சு தான் தீ பரவியிருக்கும்னு அக்கம்பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் நினச்சாங்க. போலீஸும் மொதல அப்படித்தான் நடந்திருக்கும்னு நம்பி, அந்த கோணத்துல விசாரணை பண்ணாங்க. ஆனா, ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்ல இருந்த நாகரத்னா கிட்ட நேர்ல போய் விசாரணை பண்ணப்பதான், அது விபத்து அல்ல, ஒரு திட்டமிட்ட கொலை அப்டிங்குறது தெரியவந்துச்சு. கர்நாடக மாநிலம், மைசூர்ல உள்ள பி.எம்.ஸ்ரீ நகர சேர்ந்த மகேஷ் - நாகரத்னா தம்பதிக்கு 12 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்துருக்குது. இதுக்கு இடையில, மகேஷுக்கும், நாகரத்னாவுக்கும் கடந்த சில வருஷமாவே சண்டை நடந்துட்டே இருந்துருக்குது. உன் சொந்தபந்தங்களுக்கு மட்டும்தான் நல்லது கெட்டது செய்வ, என் சொந்தபந்தங்கள்னா கண்டுக்கமாட்டனு ஆரம்பிச்ச சண்டை அடுத்து சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட முட்டலும் மோதலுமாவே இருந்துருக்குது. இந்த சூழல, மகேஷ் சம்பாரிச்சு கொடுக்குற பணத்த நாகரத்னா வட்டிக்கு விட்டுட்டு இருந்துருக்காங்க. இத மகேஷ்கிட்ட சொல்லாமலேயே நாகரத்னா பண்ணிட்டு இருந்ததா சொல்லப்படுது. இந்த விஷயம் மகேஷுக்கு தெரியவரவே, மனைவி நாகரத்னாகிட்ட சண்ட போட்டுருக்காரு.என்ன ஒரு ஆளாவே மதிக்க மாட்டிக்கிற, உன் இஷ்டத்துக்கு இருக்கன்னு கேட்டு கத்திருக்காரு. ஆனா, நாகரத்னாவோ கணவன ஒரு பொருட்டாவே மதிக்காம தான் பண்றதுதான் கரெக்ட்னு இருந்ததா சொல்லப்படுது. மனைவி இப்படியே பண்ணிட்டு இருந்தத பாத்து, ஒருகட்டத்துல ஆத்திரத்தோட உச்சிக்கே போன மகேஷ், நாகரத்னாவ கொலை செய்ய முடிவு பண்ணிருக்காரு. அதுக்காக, தன்னோட நண்பர்களுக்கு அஞ்சு லட்சம் கொடுத்து அவங்க கதைய முடிக்க பக்காவ ஸ்கெட்ச் போட்டுருக்கான் மகேஷ். அதுபடியே சம்பவத்தனைக்கு நாகரத்னா வீட்டுல தனியா இருந்துருக்காங்க. அப்போ, வீட்டுக்குள்ள நுழைஞ்ச மகேஷோட ஃபிரண்ட்ஸ் அபிஷேக், பாஸ்கர் ரெண்டு பேரும் சேர்ந்து நாகரத்னாவோட தலையில சுத்தியலால அடிச்சிருக்காங்க. அதுல, நாகரத்னா மயங்கி விழுந்துருக்காங்க. அப்போ, கிச்சன்ல இருந்த கேஸ் சிலிண்டர லீக் பண்ணி விட்டுட்டு மயக்கத்துல இருந்த நாகரத்னா மேல பெட்ரோல் ஊத்தி தீ வச்சிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்காங்க. கணவரோட நண்பர்கள் தன்னைய சுத்தியால அடிச்சு பெட்ரோல் ஊத்தி வச்சத நாகரத்னா போலீஸ்கிட்ட சொல்லிருக்காங்க. அவங்க கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில, கணவன் மகேஷையும், நண்பர்களான அபிஷேக், பாஸ்கரையும் பிடிச்சு விசாரிச்சப்பதான் இந்த கொலை முயற்சிக்கான சதி திட்டமே போலீஸுக்கு தெரியவந்துச்சு. அதுக்குப்பிறகு, மனைவிய கொலை செய்ய முயற்சி பண்ண மகேஷையும், பணம் வாங்கிட்டு கொலை முயற்சிக்கு உடந்தையா இருந்த அபிஷேக்கையும், பாஸ்கரையும் கைது பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க.