மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாலையோரம் கோலம் போட்டுக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது 17வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.