உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் தேவாலயங்களில் உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை, சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள், ஒருவருக்குகொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் வழிபாடுஉலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி நடந்த சிறப்பு திருப்பலியில் திரளானோர் பங்கேற்றனர். பனிமய மாதாவை வழிபட்ட மக்கள், புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.திண்டுக்கல் அருகே தேவாலயத்தில் கூட்டு திருப்பலிதிண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள காமலாபுரத்தில் பழமையான புனித திருமுழுக்கு அருளப்பர் தேவாலயத்தில் நடந்த கூட்டு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். புத்தாண்டு தினத்தில் குழந்தை இயேசுவை சிறுமிகள் நடனமாடி வரவேற்றனர்.கடையம் அருகே சிஎஸ்ஐ தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுதென்காசி மாவட்டம், கடையம் அருகே மேட்டூரில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தி, உலகத்திற்கு சாட்சியாக வாழ்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.வண்ண விளக்குகளால் ஜொலித்த செஞ்சி கன்மலை தேவாலயம்விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள சிஎஸ்ஐ கன்மலை தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது, சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.தஞ்சை பூண்டி மாதா பேராலயத்தில் குவிந்த மக்கள்தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.